இந்தியாவில் எல்லோருக்கும் பொதுவான / சமமான ஒன்று என்று எந்த விஷயமும் இருந்ததில்லை. "அரசியலமைப்புச் சட்டம் எல்லோருக்கும் பொதுவாதனது, அதன் முன் இந்தியர்கள் அனைவரும் சமம்" என்று படித்ததை, சின்ன வயதில் விவரம் தெரியமால் நம்பிக் கொண்டிருந்தேன். நானும் சக மனிதனும் சமமல்ல என்று நிறுவ ஒவ்வொருவரின் மனதும் தங்களையறியாமல் முயன்று கொண்டே இருக்கிறது. சொல்லப்போனால், நான் சக மனிதனை விடக் கொஞ்சம் மேலே என்பதை ஒருவித பாதுகாப்புணர்வாக நினைக்கிறோம். நமக்குக் கீழே நாலு பேர் இருக்கிறார்கள் என்பதே நிறையே பேருக்கு ஒரு comfort கொடுக்கிறது.
துரதிருஷ்ட வசமாக சாதி, மத, இன அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளைப் பேசும் அளவுக்கு நாம் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைப் பேசுவதில்லை. முதலாளித்துவ அடிப்படையிலான தனியார் நிறுவனங்கள், சக மனிதர்களுக்கிடையே இப்படி ஏற்றத்தாழ்வுகளை விதைத்து காலங்காலமாக லாபம் ஈட்டிக்கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு, ஹமாம் சோப் வெளியிடும் அதே நிறுவனம் அதிக விலையில் டவ் சோப்பும் விற்பனை செய்யும். உங்கள் பொருளாதார நிலைக்கு ஏற்ப உங்களை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டிக் கொள்ள, டூத் பேஸ்டில் இருந்து கார், விமானம் வரை எல்லாவற்றிலும் ஸ்பெஷல் வகையறாக்கள் இருக்கும்.
இதற்கு மேல் ஸ்பெஷல் வைக்க ஒன்றும் இல்லை என்ற நிலை வந்தால் கூட, அங்கும் ஒரு மெலிசான கோடாவது வைக்கத் தவறுவதில்லை. ஏனென்றால் அது தான் பணம் அதிகம் வைத்திருப்பவனைக் கொஞ்சமாவது திருப்திப் படுத்தும். நான் மற்றவர்களை விடக் கொஞ்சம் உயர்வாக இருக்கிறேன் என்ற நிம்மதியைத் (! தற்காலிகமாவது ) தரும். இதைப் பயன்படுத்திச் சம்பாதித்துக் கொள்ளலாம். உதாரணத்துக்கு விமானப் பயணத்தை எடுத்துக் கொள்ளலாம். எல்லோருக்கும் ஒரே விமானம், ஒரே இருக்கை என்று இருந்தால் பணம் சம்பாதிக்க முடியாது. பணம் வைத்திருப்பவனுக்கும் ஒரு comfort கிடைக்காது. ஆனால் தனியாக இருக்கை தர முடியவில்லை, என்ன செய்யலாம் என யோசித்து, மூன்று இருக்கைகள் இருக்கும் வகுப்பில், நடுவில் ஒருவர் உட்கார மாட்டார். நீங்கள் சொகுசாகப் பயணம் செய்யலாம் என்று விளம்பரம் செய்து, இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கிறார்கள். மக்களும் செலவு செய்யத் தயாராக இருக்கிறார்கள். வெறும் ஒன்றரை மணி நேர பயணத்திற்கே இப்படி என்றால், தினமும் பயன்படுத்தும் எத்தனை விஷயங்களில் இப்படிப் பணம் வைத்திருப்பவர்களைத் திருப்திப் படுத்த நிறுவனங்கள் முயற்சி செய்யும் என்று யோசிக்கவும்.
சரி எல்லா நாடுகளிலும் தானே இப்படி இருக்கிறது, இதில் இந்தியாவைக் குறை சொல்ல ஒன்றும் இல்லையே என்கிறீர்களா? கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், இப்படி தனியார் நிறுவனங்கள் ஏற்றத்தாழ்வுகளை விதைத்துப் பணம் சம்பாதிப்பதை, அரசு எந்த ஒரு துறையிலும் தடுத்ததே இல்லை. சொல்லப் போனால், மறைமுகமாக ஊக்குவிக்கவே செய்கிறது. இன்னும் சொல்லப் போனால், அரசும் இதையே செய்கிறது. ஒரு உதாரணம், நகரத்தில் இயக்கப்படும் சொகுசுப் பேருந்துகள். தொலை தூரப் பயணங்களுக்குச் சொகுசுப் பேருந்துகளை அதிகமான கட்டணத்தில் இயக்கினால் கூட ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் நாலு கிலோமீட்டருக்கு சொகுசுப் பேருந்து என்ற ஒன்றை அறிமுகப் படுத்தி, இரண்டரை மடங்கு கொள்ளையடிக்கும் அரசு, எப்படித் தனியார் நிறுவனங்களைத் தடுக்கும் என்று எதிர் பார்க்க முடியும்?
சரி விஷயத்திற்கு வருகிறேன். பொதுமக்களை நேரடியான வாடிக்கையாளராகக் கொண்ட எந்தத் துறையையும் முழுமையாக அரசு மட்டுமே ஏற்று நடத்துவதில்லை. நமது அரசும், சாதாரண மக்களால் நடத்தப் படுவதில்லை. குறைந்த பட்ச சொத்து மதிப்பு இருப்பவர்கள் தான் ஒவ்வொரு அரசிலும் இடம் பெறுகிறார்கள். எல்லாவற்றையும் அரசு ஏற்று நடத்தினால், சக மக்களுடன் இவர்களும் ஒன்றாகி விடுவார்கள். அதை அவர்கள் விரும்புவதில்லை. முக்கியமாக அரசியல்வாதிகளுக்குப் படியளக்கும் தொழிலதிபர்கள் விரும்புவதில்லை.
ஒரு சமூகத்தின் ஆணி வேறான கல்வியை மட்டுமாவது அரசு முழுமையாக ஏற்று நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இந்தியச் சூலில், முக்கியமாக இப்போதிருக்கும் அரசியல் சூழலில் இப்படி நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று கருதுகிறேன்.
இந்தக் கோரிக்கையை வைப்பவர்கள் சொல்லும் ஒரு உதாரணம்,
டாஸ்மாக் கடைகளை அரசே ஏற்று நடத்துவதைப் போலக் கல்வி கூடங்களையும் நடத்த வேண்டும் என்பதே. இந்தக் கோரிக்கை வைப்பர்களுக்கு இரண்டு விஷயங்களை முதலில் புரிய வைக்க வேண்டும் .
1. அரசு அடிப்படைக் கல்விக்கூடங்களை நடத்திக் கொண்டு தான் இருக்கிறது, நாம் தான் அதில் படிக்க விரும்புவதில்லை
2. தனியார் ஒயின் ஷாப்புகளைத் தான் அரசு ஏற்று நடத்துகிறதே தவிர, ஹோட்டல் பார்களை அல்ல
இரண்டாவது விஷயத்தைக் கொஞ்சம் கவனித்தால், அரசு 100 % மதுக்கடைகளை நடத்துவதில்லை. சாதாரண மக்கள் குடிப்பதற்கான கடைகளை மட்டும் தான் அரசு நடத்துகிறது. இந்தக் கோரிக்கையின் அடிப்படையில் பார்த்தல், எல்லா ஹோட்டல்களில் உள்ள பார்களையும் மூடிவிட்டு, டாஸ்மாக்கை மட்டுமே அரசு நடத்த வேண்டும். இது சாத்தியமா? அரசால் செய்ய முடியுமா என்று யோசிக்க வேண்டும். செய்ய முடியும், ஆனால் செய்ய விட மாட்டார்கள். ஒரு தொலதிபரும், சினிமா நடிகரும், அமைச்சரும் உங்களுடன், ஒரு புகை சூழ்ந்த டாஸ்மாக்கில் அமர்ந்து குடிப்பதை உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா? உங்களாலேயே இதை ஏற்றுக் கொள்ள முடியாத போது, அதிகாரத்தில் இருப்பவர்கள் இதை நடைமுறை படுத்துவார்கள் என்று நம்புகிறீர்களா?
அதிகாரத்தில் இருப்பவர்களை விடுங்கள், ஒரு சாதாரண நடுத்தர வர்கத்தின் மனநிலை என்ன? தன்னுடைய நிலையில் இருப்பவர்களை விடத் தன் குழந்தைகள் வசதியான கல்விக் கூடங்களில் படிக்க வேண்டும் என்பதைத்தானே விரும்புகிறார்கள்? "அவையத்து முந்தி இருப்பச் செயல்" என்பதைப் பெரும்பாலான பெற்றோர்கள் "அவையத்து வசதியாக இருப்பச் செயல்" என்று புரிந்து கொண்டு, அதிகமாகக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் தான் உயர் தரமானவை என்று நம்புகிறார்கள். சமூகத்தின் கடைசி மட்டம் வரை இது தான். இப்படி ஒரு சமூகச் சூழலில், எல்லோருடைய குழந்தைகளும் ஒரே வகுப்பறையில் அமர்வதை எத்தனை பேர் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறீர்கள்?
சரி எதோ ஒரு அதிசயம் நிகழ்ந்து, அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசுடைமையாக்கி, முழுக்க அரசே நடத்துவதாக எடுத்துக் கொள்வோம். அப்போது, எல்லாப் பள்ளிகளிலும் கல்வித்தரம் ஒரே மாதிரி இருக்குமா? குறைந்த பட்சம், எல்லாப் பள்ளிகளிலும் சமமான உள்கட்டமைப்பு வசதிகள் இருக்குமா? தகுதியான ஆசிரியர்கள் சரியான விகிதத்தில் நியமிக்கப் படுவார்களா? உதாரணமாக அரசு நடத்தும் பொறியியல் கல்லூரிகளை எடுத்துக்கொள்வோம். எல்லாக் கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான உள்கட்டமைப்பு வசதிகளும் ஆசிரியர்களும் இருக்கிறார்களா? இருக்கும் பத்து இருபது கல்லூரிகளுக்கே அரசால் இதை எல்லாம் சரி சமமாகச் செய்து, உறுதிப் படுத்த முடியாத போது, மொத்தப் பள்ளிகளுக்கும், இதைச் சரியாக நடைமுறைப்படுத்த எவ்வளவு காலம் ஆகும்? அதற்கான ஊழியர்கள், செலவுகள் இவற்றை எப்படிச் சமாளிப்பது? தொழிலதிபர்கள் நடத்தும் பள்ளிக் கல்லூரிகளில் இருந்து அரசியல்வாதிகளுக்கு வரும் வருமானம் தடைபடுமே, அதை எப்படிச் சரி கட்டுவது?
மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தும் என்று அறிவித்து விட்டு, தங்கள் கட்சி ஆட்களுக்கு உள் குத்தகைக்கு விட்டதைப் போல, இதிலும் நடந்தால், நிலைமை இன்னும் மோசமாக அல்லவா ஆகிவிடும்? இவ்வளவு தலைவலிகள் உள்ள ஒரு விஷயத்தில் ஒரே ஒரு தீர்வு என்பது இருக்காது, ஆனால் எனக்குத் தெரிந்த ஒரே தீர்வு, ஒரு தன்னிச்சையான, சர்வாதிகாரி முதல்வர், அதே நேரம் இதன் மகத்துவத்தையும், தொலைநோக்குப் பலனையும் உணர்ந்த முதல்வர், எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் துணித்து இதைச் செயல் படுத்தினால் தான் உண்டு. எனக்குத் தெரிந்து தமிழக அரசியல் களத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை அப்படி யாரும் இல்லை. என் மகனும், தன் குழந்தைக்கு எல்.கே.ஜி அப்ளிகேஷன் வாங்க இரண்டு நாட்கள் வரிசையில் நிற்க வேண்டியது தான் போல.