Sunday, 1 December 2013

நீதி போதைக் கதை - 3

"டேய் 6 தோசை, 2 இட்லி பார்சல் கேட்டான்டா குமாரு"
"அந்த நாயி போதையில உளறுது, ஒரு தோசை மட்டும் வாங்கு போதும், அதையே திங்காது"
"அரை பாக்கெட் black வாங்க சொன்னான்டா"
"பில்டர் வாங்கு போதும், போதைல எதை வேணும்னாலும் குடிப்பான்"

"டேய் குமாரு, எந்திரிடா, தின்னுட்டு படுடா டேய்" தீபக்கும், ரமேஷும் எழுப்பிப் பார்த்துவிட்டு முடியாததால், சாப்பிட்டுப் படுத்துவிட்டார்கள்.

வலதுபுறம் படுத்திருந்த தீபக் நடுஇரவில் தன் கையில் எதோ ஈரமாக இருப்பதை உணர்ந்தான். "டேய் ரமேஷ், இந்த குமாரு பன்னாடை வாந்தி எடுத்து வச்சுருக்குடா" என்று கத்திவிட்டு பாத்ரூம் சென்று அலசிவிட்டு, இந்தப் பக்கம் வந்து ரமேஷுக்கும், குமாருக்கும் இடையில் படுத்துக் கொண்டான்.

11 மணிக்கு தூங்கி எழுந்த குமார் வாந்தியைப் பார்த்தான் "டேய் தீபக் நாயே, அங்க வாந்தி எடுத்துட்டு நடுவுல வந்து படுத்துட்டியா?"
நீதி போதைக் கதை - 2 

எட்டு பேரும் ஒவ்வொருவராக போதையில் கவுந்துக் கொண்டிருந்தார்கள். தீபக் மட்டும் தனது ஏழாவது ரவுண்டை நிதானமாக அடித்துக் கொண்டிருந்தான். எதிரே சுரேஷ் கொக்க கோலாவையும் மூங் தாலையும் கையில் வைத்துக் கொண்டே, "என்னடா குடிச்சானுங்க? இப்படி மட்டை ஆகிட்டனுங்க?" எனக் கேட்டான்.

"சின்னப் பசங்க சுரேஷ், இவுனுங்கல்லாம் எதுக்கு குடிக்குறானுங்கன்னே தெரியல, இப்படி ஒயின், பீருக்கேல்லாம் பிளாட் ஆகிடுரானுங்க. எனக்குத் தான் ஏறவே மாட்டேங்குது"

சுரேஷ் ஆர்வமாகக் கேட்டான், "நீங்க ரொம்ப காலமா குடிப்பீங்களா?"
"இல்லைங்க, இப்பத்தான் ரெண்டு வருஷமா குடிக்குறேன், ஆனா ஒன்னு நீங்க மட்டும் தான் தண்ணி அடிக்காம தெளிவா இருக்கீங்க, எல்லாரையும் பாத்து கூட்டி போகனும்"
தண்ணி அடிச்சாலும் இவ்வளவு பொறுப்பான ஒருத்தனா? என ஆச்சர்யப்பட்டான் சுரேஷ்.

ஏழாவது ரவுண்ட் முடிந்ததும் தீபக் மீண்டும் சொன்னான் "சுரேஷ், நீங்க மட்டும் தான் குடிக்காம தெளிவா இருக்கீங்க, எல்லாரையும் பத்திரமா கூட்டிப் போகணும்"
"கொஞ்ச நேரம் ஆகட்டும், எல்லாரையும் எழுப்பி வண்டியில ஏத்திடலாம்"

"ஆமா சுரேஷ், நீங்க மட்டும் தான் குடிக்காம தெளிவா இருக்கீங்க, எல்லாரையும் பத்திரமா கூட்டிப் போகணும்"
"கண்டிப்பா பாத்துக்குறேன்"

"சுரேஷ், நீங்க மட்டும் தான் குடிக்காம தெளிவா இருக்கீங்க, எல்லாரையும் பத்திரமா கூட்டிப் போகணும்"
.............................
"சுரேஷ், நீங்க மட்டும் தான் குடிக்காம தெளிவா இருக்கீங்க, எல்லாரையும் பத்திரமா கூட்டிப் போகணும்"
.......................................
"சுரேஷ், நீங்க மட்டும் தான் குடிக்காம தெளிவா இருக்கீங்க, எல்லாரையும் பத்திரமா கூட்டிப் போகணும்"
..........................
"சுரேஷ், நீங்க மட்டும் தான் குடிக்காம தெளிவா இருக்கீங்க, எல்லாரையும் பத்திரமா கூட்டிப் போகணும்"
"போதும்டா நெறைய தடவ சொல்லிட்ட, நான் கூட்டி போறேன் டா"

"சரிங்க சுரேஷ், நீங்க மட்டும் தான் குடிக்காம தெளிவா இருக்கீங்க, எல்லாரையும் பத்திரமா கூட்டிப் போகணும்"
.................................

"சுரேஷ், நீங்க மட்டும் தான் குடிக்காம தெளிவா இருக்கீங்க, எல்லாரையும் பத்திரமா கூட்டிப் போகணும்"
"டேய் ........, சரக்கு மிச்சம் இருக்காடா, இருந்தா எனக்கும் ஊத்து".
நீதி போதைக் கதை - 1

"உன் தங்கச்சி வீட்டுக்காரர் மேல அப்படி என்னடா உனக்கு காண்டு, நைட் போதையில அந்த திட்டு திட்டுற ?" 
"விடுறா அவன் கெடக்குறான், உன்னோட மொபைல்ல இருந்து தானே திட்டுனேன், எதாச்சும் unknown நம்பர் வந்தா அட்டெண்ட் பண்ணாத" "டேய் லூசு, உன் நம்பர்ல இருந்து தாண்டா பண்ணிருக்க" என சொன்னதும் மகேஷுக்கு hangover தலைவலி இன்னும் அதிகமாகியது.

குழப்பத்துடனே மொபைலை எடுத்து dialed காலில் மாப்பிள்ளைபெயரைப் பார்த்ததும், பகீர் என்றது, என்ன செய்வதென்றே தெரியாமல் மீண்டும் கால் செய்தான், மூன்று ரிங்கிற்க்குப் பின்

"மாப்பிள்ளை நைட் வந்து உங்களுக்கு கால் பண்ணி" என ஆரம்பித்ததும்
"சாரி மச்சான், நீங்க கால் பண்ணுனப்ப, நான் ஏதோ உங்களை திட்டுனதா பசங்க சொன்னாங்க, எனக்கே தெரியல, உங்க தங்கச்சி ஊர்ல இல்லையா அதான் கொஞ்சம் friends கூட பார்ட்டி, நீங்க ஏதும் தப்பா எடுத்துக்காதிங்க, நானே கால் பண்ணலாம்ன்னு இருந்தேன் அதுக்குள்ளே நீங்க பண்ணிட்டிங்க. அவ கிட்ட சொல்லிடாதிங்க"
"பரவால்ல மாப்பிள்ளை நமக்குள்ள என்ன? அப்புறம் என்ன பார்ட்டி?