Sunday, 1 December 2013

நீதி போதைக் கதை - 1

"உன் தங்கச்சி வீட்டுக்காரர் மேல அப்படி என்னடா உனக்கு காண்டு, நைட் போதையில அந்த திட்டு திட்டுற ?" 
"விடுறா அவன் கெடக்குறான், உன்னோட மொபைல்ல இருந்து தானே திட்டுனேன், எதாச்சும் unknown நம்பர் வந்தா அட்டெண்ட் பண்ணாத" "டேய் லூசு, உன் நம்பர்ல இருந்து தாண்டா பண்ணிருக்க" என சொன்னதும் மகேஷுக்கு hangover தலைவலி இன்னும் அதிகமாகியது.

குழப்பத்துடனே மொபைலை எடுத்து dialed காலில் மாப்பிள்ளைபெயரைப் பார்த்ததும், பகீர் என்றது, என்ன செய்வதென்றே தெரியாமல் மீண்டும் கால் செய்தான், மூன்று ரிங்கிற்க்குப் பின்

"மாப்பிள்ளை நைட் வந்து உங்களுக்கு கால் பண்ணி" என ஆரம்பித்ததும்
"சாரி மச்சான், நீங்க கால் பண்ணுனப்ப, நான் ஏதோ உங்களை திட்டுனதா பசங்க சொன்னாங்க, எனக்கே தெரியல, உங்க தங்கச்சி ஊர்ல இல்லையா அதான் கொஞ்சம் friends கூட பார்ட்டி, நீங்க ஏதும் தப்பா எடுத்துக்காதிங்க, நானே கால் பண்ணலாம்ன்னு இருந்தேன் அதுக்குள்ளே நீங்க பண்ணிட்டிங்க. அவ கிட்ட சொல்லிடாதிங்க"
"பரவால்ல மாப்பிள்ளை நமக்குள்ள என்ன? அப்புறம் என்ன பார்ட்டி?

No comments:

Post a Comment