சதை தாண்டி, இச்சை தாண்டி, காமம் தாண்டி
சஞ்சரிக்கும் தவம் காதல்.
#தரமணி படத்தின் போஸ்டர்களில் இப்படி விளம்பரப் படுத்துகிறார் இயக்குனர் ராம்.
தொடர்ந்து தெய்வீகக் காதல், காமமில்லாக் காதல், புனிதமானக் காதல், சமூக விழுமியங்கள் இப்படி தனக்கு பிடித்தமான விஷயங்கள் மட்டுமே உண்மையானவை என்று தனது படங்களின் மூலம் ரசிகர்களை நம்ப வைத்துக் கொண்டிருக்கின்றார். கொடுமை என்னவென்றால் இவரை தமிழகத்தின் மிகப்பெரிய இண்டெலெக்சுவலாக நினைத்து அப்பாவி இளைஞர்கள் பலர் இவரை வழிபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ் எம். ஏ ஒரு ஆகச் சிறந்த குப்பை. பீச்சில் இரண்டு பேர் முத்தம்
கொடுத்துகொள்கிரார்கள் என்றால் அது அவர்கள் உதடு. அதற்காக கொலை
செய்வதெல்லாம் பெரிய காமெடி.. கேட்டால் பப்ளிக்கில் செய்கிறார்கள் என்றும்,
சமுதாயம் தான் அவனை அப்படி செய்ய வைத்தது என்றும் விளக்கம் சொல்லுவார்.
உளவியல் ரீதியாகப் பார்த்தால், இந்த சதையில்லா காதல், காமமில்லா காதல்
போன்ற போலி கலாச்சார விழுமியங்கள் தான் அப்படி ஒருவன் பீச்சில் முத்தம்
கொடுத்துக் கொள்பவர்களைப் பார்த்து கோபப் பட வைக்கிறது. கொடுமை
என்னவென்றால் அதே போலி விழுமியங்களை ராம் தான் தனது ரசிகர்களுக்கு
புகட்டிக் கொண்டிருக்கிறார்.
பொதுவெளியில் முத்தம் கொடுத்தால் என்னய்யா தவறு? எல்லா விலங்குகளும் பொதுவெளியில் தான் புணர்கின்றன. அது தான் இயற்கை. இரண்டு நாய்கள் புணரும்போது இன்னொரு நாய் வெறிக்க வெறிக்க நின்று வேடிக்கை பார்ப்பதில்லை.. காதலர்கள் எல்லை மீறுகிறார்கள் என்று பொங்கும் கலாச்சாரக் காவலர்களை நினைத்தால் அப்படி வேடிக்கை பார்க்கும் ஒரு நாயைப் போலத்தான் எனக்குத் தோன்றுகிறது. மனிதனுடைய பாலியல் ஒழுக்கக் கோட்பாடுகள் எல்லாம் இயற்கையானவை என்று நினைத்தால் அதை விட முட்டாள்தனம் எதுவுமில்லை. இந்த பாலியல் ஒழுங்கு என்று வெங்காயங்கள் எல்லாம் முழுக்க முழுக்க நாமே கட்டமைத்துக் கொண்ட செயற்கை விதிகள்.
Guns, Germs, and Steel: The Fates of Human Societies என்ற புத்தகத்தை எழுதிய Jared Diamond எழுதிய இன்னொரு அற்புதமான புத்தகம் Why is Sex Fun? The Evolution of Human Sexuality . இது இலவசமாக PDF இல் கூட கிடைக்கிறது. முடிந்தவர்கள் படித்துப் பாருங்கள். மனிதன் பாலியல் ஒழுக்கம் தொடர்பான விஷயங்களில் எவ்வளவு செயற்கையாக நடந்து கொண்டிருக்கிறான் என்பது புரியும். ராம் மாதிரியான ஆட்கள் கையில் இந்த சமூகம் மாட்டும்போது ஆண்குறியை வெட்டிவிட்டு, பெண்குறியை சிமெண்ட் வைத்து நிரப்பிவிட்டும் தான் காதலிக்க அனுமதிப்பாரோ என்று தோன்றுகிறது.
"என்னடா உன் ஆளுக்கு முத்தம் கொடுத்தியா?"ன்னு கேட்டால், "தப்பா பேசாதடா, எங்க காதல் புனிதமானது, அவளை அந்த மாதிரி எண்ணத்தோட என்னால பார்க்கவே முடியாது" என்று சில கோஷ்டிகள் பதில் சொல்லும். "அடேய் உன் ஆளை தாண்டா அப்படி பாக்கணும், மத்த பொண்ணுங்களை அந்த என்னத்துல பாக்கக் கூடாதுன்னு" சொன்னாலும் அவங்களுக்கு புரியாது. எத்தனை ஆதவன் வந்தாலும் இவங்களை திருத்தமுடியாது. இந்த மாதிரி அப்பாவி குஞ்சுகள் ராம் மாதிரி விழுமிய இயக்குனர்கள் கையில் சிக்கும்போது இந்த சமூகத்தில் எல்லாமே தவறு என்பதைப் போல பொங்கிக் கொண்டிருப்பார்கள். ராம் ரசிகர்கள் முதலிரவுக்கு போகும்போது, ஒரு தூபக்காலும், சூடத் தட்டும் கொண்டு போவார்கள் என்று நம்புகிறேன்.

No comments:
Post a Comment