"காந்தியை ஏமாற்றி வரும் இந்தியா" என்ற தலைப்பில் திரு மு. இராமனாதன் தமிழ் இந்துவில் ஒரு அழகான கட்டுரை எழுதியிருக்கிறார். ஹாங்காங் புறநகர் பகுதி மோனோ ரயிலில் இவர் பயணித்த போது, மெட்ரோ ரயில்களைப் போல டிக்கெட் இருந்தால் தான் திறக்கும் தானியங்கி கதவுகள் இல்லாமல் இருந்த போதும், எல்லோரும் முறையாக டிக்கெட் எடுத்து பயணித்ததைப் பார்த்து ஆச்சர்யமடந்திருக்கிறார். தன்னுடன் வந்தவரிடம், "இது எப்படி சாத்தியமானது?" என்று கேட்டபோது, அவர் "நாங்கள் சட்டத்தை மதிக்க வேண்டும் எனபதை பள்ளியிலேயே பழக்கிவிடுகிறோம்" என்றாராம்.
"காந்தி விடுதலைப் போராட்டத்திற்காக சட்டத்தை மீறினாலும், மற்ற விஷயங்களில் எல்லோரும் சட்டத்தை மதிக்க வேண்டும் என்றே விரும்பினார். ஒரு நல்ல சிவில் சமூகம் சட்டத்தை மதிக்க வேண்டும் என்று அவர் சொன்னதை ஏன் பள்ளியிலேயே நாம் குழந்தைகளுக்குச் சொல்லித் தருவதில்லை?" என்று வருத்தப்படுகிறார். தான் பார்த்த சில உதாரணங்களைக் குறிப்பிட்டு, சட்டத்தை மதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தால் இளைஞர்கள் இப்படி ஆகியிருக்க மாட்டார்கள் என்கிறார்.
காந்தி சொன்னபடி சட்டத்தை மதிப்பதை பள்ளிகள் போதிக்கின்றனவா என்பதை பின்னால் பார்க்கலாம். முதலில் காந்தியைப் பற்றி பள்ளிகள் என்ன சொல்லித்தருகின்றன என்பதைப் பார்ப்போம். பாடத்திட்டம், பேச்சுப்போட்டி, ஆண்டுவிழா இவற்றிலெல்லாம் காந்தியும் அஹிம்சையும் முன்னிறுத்தப் படுகின்றன. ஆனால் மாணவர்களுடன் நேரடியாக உரையாடும் ஆசிரியர்களுக்கு காந்தியின் மேலுள்ள அபிப்பிராயம் என்ன? உண்மையில் சரி பாதி ஆசிரியர்களுக்கு காந்தியைப் பிடிக்கவில்லை. அதிலும் சில பேருக்கு காந்தி என்றாலே ஆகாது. ,
"காந்தி ஒரு அயோக்கியன், ஏமாற்றுக்காரன், ("ன்" தான் "ர்" அல்ல) தேச துரோகி, சுயநலவாதி, பொம்பளை பொருக்கி, காந்தியால் தான் சுதந்திரம் தாமதமானது, சண்டையிட்டிருந்தால் வெள்ளைக்காரன் அப்பவே ஓடியிருப்பான், கோட்சே தான் உண்மையான தேச பக்தன்" இப்படி எல்லாம் ஒரு ஆசிரியர் தன்னுடைய மாணவர்களுக்கு சொல்லித் தருவதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? ஒரு ஆசிரியர் அல்ல, பலர் இதையே செய்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, ஆசிரியர் சொல்லிக்கொடுக்கும் நல்ல விஷயங்களை அரிதாகவே ஏற்றுக்கொள்ளும் மாணவர்கள் இதை அப்படியே நம்பி ஏற்கிறார்கள்.
"உலகமே உத்தமர் என்று சொல்பவரைப் பற்றிய ரகசிய உண்மைகள் எனக்குத் தெரியும், நல்லவேளை என் ஆசிரியர் உண்மையைச் சொன்னதால் அந்த ஆளைப் பற்றி தெரிந்தது, இல்லையென்றால் உன்னைப் போல நானும் அவனை தேசத்தந்தை என்று நம்பியிருப்பேன்" என்ற மனநிலையில் நிறைய மாணவர்கள் பேசியதைக் கேட்டிருக்கிறேன். ஒரு பத்தாவது படிக்கும் சிறுவனுக்கு வேறு என்ன மனமுதிர்ச்சி இருக்கக்கூடும். ஒருமுறை இப்படி மனதில் பதிய வைக்கப்பட்டபின் அதை மாற்றுவது மிகவும் கடினமான வேலையாக இருக்கிறது.
ஒரு பக்கம் நேதாஜி வெறியர்கள், சில ஜாதி அமைப்பில் மூழ்கிப் போனவர்கள், இன்னொரு பக்கம் அம்பேத்காரை புறக்கணித்தார் காந்தி என்ற ஆதங்கத்தில் இன்னொரு ஜாதி ஆட்கள், இன்னொரு பக்கம் இப்படி அரைகுறையாக கேள்விப்பட்டு, அரைகுறையாகவே பயின்ற ஆசிரியர்கள். இன்னும் சில பேருக்கு அஹிம்சை, சத்தியாகிரகம் என்பதெல்லாம் ஒரு நடக்கவியலாத சமாச்சாரமாகத் தெரிகிறது. அதெல்லாம் நடந்திருக்க சாத்தியமே இல்லை, இரண்டாம் உலகப் போரால் இங்கிலாந்து நலிவடைந்து இருந்தது, அதனால் அவர்கள் வெளியேறினார்கள். புகழை எல்லாம் காந்தி எடுத்துக்கொண்டார் என்பார்கள்.
அஹிம்சை என்பது ஒரு ஆச்சர்யமான, நிகழ வாய்ப்பே இல்லாத விஷயம் தான். இத்தனை கோடி வருடங்களாக பூமியில் இருந்துவரும் உயிரினங்களின் அடிப்படை இயல்புக்கு எதிரானது. எந்த உயிரினமும், தன்னை ஒரு வலிமையான எதிரி தாக்கும்போது, முடிந்த அளவு போராடித்தான் சரணடையும். அஹிம்சை முறையில் எந்த விலங்குடனும் போராட முடியாது, மனிதனைத் தவிர. ஆயுதம் ஏந்திப் போராடுவதை விட அறவழி அஹிம்சைப் போராட்டத்திற்கு, தைரியம், மன முதிர்ச்சி, ஒற்றுமை வேண்டும். இத்தனை கோடி ஆண்டு வரலாற்றுக்கு எதிராக, இவ்வளவு பெரிய தேசத்தில் மக்களை ஒருங்கிணைத்து காந்தி அதை சாதித்தற்காகத்தான் உலகம் அவரைக் கொண்டாடுகிறது.
அவருக்கும் சில குறைகள் இருந்ததன. அதை அவர் பொதுவில் வைத்தார். உங்களுக்கோ எனக்கோ அந்த தைரியம் இல்லை, நாம் ஒருவேளை ஒரு குழந்தையை வன்புணர்வு செய்திருப்போம், நண்பன் நாசகாகப் போக வேண்டும் என்று வேண்டியிருப்போம். சந்தப்பம் கிடைத்தால் யாரையாவது கொலை செய்யலாம் என்று எண்ணியிருப்போம். ஆனால், இதையெல்லாம் வசதியாக மறந்தோ மறுத்தோ விடுவோம். ஒருவேளை காந்தியைப் போல நாமும் சுய பரிசோதனை செய்துகொண்டிருந்தால் யார் அயோக்கியன் என்று தெரியவரும்.

No comments:
Post a Comment