தேர்க்கால் சிறுகதையில் தேருக்கு சன்னக் கட்டை போடுவதைப் பற்றி ராஜன் எழுதியதைப் படித்தபோது, ஒரு நிமிடம் மனது கதையை விட்டுவிட்டு தேர்களின் நினைவில் சுழல ஆரம்பித்துவிட்டது. பல ஊர்களில் இந்த சன்னக் கட்டை போடுவது குறிப்பிட்ட சில சாதிகளின் அல்லது குடும்பங்களின் உரிமையாக இருக்கும். அப்படி இருந்தாலும் கொஞ்சம் வலுவான ஆண்களே சன்னக் கட்டை போட முன்வருவார்கள். கனமான மரக்கட்டையை தூக்கிக் கொண்டு தேருக்கு முன்னால் ஓடுவதற்கு அசாத்திய உடல் வலு வேண்டும்.
சில நேரங்களில் சன்னக் கட்டைகளை உடைத்துக் கொண்டு தேர்கள் உருண்டோடும்...அதற்கும் தயாராக இருக்க வேண்டும். அந்த மாதிரி நேரங்களில் சிலருக்கு கால் கூட போனதாக கேள்விப்பட்டிருக்கிறேன் . பல்லக்கில் சாமி தூக்கி வரும்போது பல்லக்கை மரக் கால்களில் இறக்கி வைப்பார்கள். அதை "ஆயக்கால்" என்பார்கள். இது பெரும்பாலும் எடை குறைவாக இருப்பதால், சின்ன பசங்களை தூக்கி வர வைத்துவிடுவார்கள். சன்னக்கட்டை போடும்போது, தேரை நிறுத்துவதற்கு சக்கரத்தின் எதிரே அந்த சாய்வான கட்டையை வைப்பதைப் போல, சில நேரங்களில் மக்கள் உணர்ச்சிப் பெருக்கில் வேகமாக இழுக்கும்போது வேகமாக ஓடும் தேரின் வேகத்தை மட்டுப்படுத்த கட்டையை பக்கவாட்டில் வைத்து வைத்து எடுப்பார்கள். தேர் அதன் மேல் ஏறி குலுங்கி இறங்கி ஓடுவதையும், தேர்போல அசைந்து வரும் அழகே என்று நம் ஆட்கள் வர்ணிப்பதையும் ஒப்பிட்டுக்கொள்க.
எப்போதோ நியாபகத்தில் பதிந்த நிகழ்வையோ, வார்த்தையோ இலக்கியத்தின் மூலம் மீட்டுருவாக்கம் செய்யும் சுகம் அலாதியானது. கடந்த வார விகடனில் வந்த எஸ்.செந்தில்குமாரின் வெண்டி மாப்பிள்ளை சிறுகதையில் "தவிதாயப்பட்டார்" என்ற வார்த்தைப் பிரயோகம் வருகிறது. தன் மகளை கல்யாணம் செய்துகொள்ளப் போகும் மாப்பிள்ளை விஷம் குடித்து விட்டான் என்ற செய்து கேட்டு அது உண்மையா என விசாரிக்க அலையும் போது இந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார். எங்கள் ஊர்ப்பக்கம் அதிகம் பயன்படுத்தும் வார்த்தை இது. இதற்கு அர்த்தம் தவிப்பது மட்டுமல்ல,.ஒன்றும் செய்ய முடியாமல் ஒரு வகையாகக் குழம்பிப் போன நிலையைக் குறிப்பது. என்னாலும் சரியாக வரையறுக்க முடியவில்லை. இந்த வார்த்தைப் பிரயோகத்தை நேரடியாகக் கேட்கும்போது தான் அந்த உணர்வு புரியும். அந்த கதை முழுவதுமே மாமனார் தவிதாயப் படுவது தான். அதில் அழகு என்னவென்றால், இந்த வார்த்தையை கதாபாத்திரங்கள் பேசும் வழக்கு மொழியோடு உபயோகிக்காமல், ஒரு ஆசிரியர் கதை சொல்லும் நடையிலேயே பயன்படுத்திருக்கிறார்

No comments:
Post a Comment