கருமம் புடிச்ச காதல் கதை -1
நேற்றைய டேட்டில் இப்படி ஒரு அதிசயம் நடக்கும் என அவன் எதிர் பார்க்கவில்லை. அந்த டிராவல்ஸ்க்குத் தான் நன்றி சொல்லவேண்டும். அவர்கள் அந்த பஸ்ஸை கேன்சல் செய்ததால் தான், நேற்று அறை எடுக்க ஒத்துக் கொண்டாள். முதல் முத்தத்தின் போது அப்படி நெளிந்தவள் நேற்று முழுவதும் கொடுத்துவிட்டாள். நல்லவேளை பக்கத்தில் மெடிக்கல் இருந்தது.மதியம் தான் வந்ததால், களைப்பில் இரவு எட்டு மணி வரைதூங்கினான். விழித்ததும் நேற்றைய இரவின் நினைவுகளாகவே இருந்தது. அவளை மடியில் கிடத்திக் கொண்டு நேற்றைய பொழுதுகளைப் பற்றி பேசி அவளின் வெட்கத்தைக் காண ஆர்வமாக இருந்தான், அது சரி அவள் இந்நேரம் ஹாஸ்டலில் தூங்கி விழித்திருப்பாளா? என்று யோசித்துக் கொண்டே தனது ஐபோனை எடுத்தான்.
அவன் நினைத்த நேரத்தில் தான் அவளும் விழித்து தன்னுடைய போனை எடுத்தாள். i love u chellam, ummmmmaa என whatsapp இல் டைப் செய்தவன் திடீரென எதோ தோன்ற அதை அழித்து விட்டு, ஏற்கனவே deactivate செய்திருந்த தனது fake id யை ஆக்டிவேட் செய்தான். அவளும் தன்னுடைய பழைய தமிழ் matrimony அக்கௌன்ட்டை ஆக்டிவேட் செய்திருந்தாள்.
No comments:
Post a Comment