அது விழுந்துகொண்டிருக்கிறது
வைக்கப்படும் போதே விழுந்துவிடும் எனத் தெரியும்வைக்கப்பட்டதே விழுவதற்காகத்தானோ? தெரியாது
விழவைக்கவே அசைந்துகொண்டும் இருக்கிறேன்
விழாமல் இருக்க அதுவும் முயலவில்லை
விழுந்துவிடு என்று ஒரு மனமும்
விழாதே என்று ஒரு மனமும் போராடிக்கொண்டிருக்கின்றன
அது எந்த மனதின் வேண்டுதலையும் கவனிக்கவே இல்லை
அதன் நிலையில்லாமையின் போக்கிலேயே விழுந்துகொண்டிருந்தது
கடைசில் பிடித்துக்கொள்ளலாம் என்று ஒரு மனமும்
பிடிக்காதே விட்டுவிடு என்று ஒரு மனமும் போராடத் தொடங்கின
விழும் நொடியை உறைய வைத்து ஓடினாலும் எட்டாத தூரத்தில்
விழுந்து கொண்டே தான் இருக்கிறது பேனாவும் வாழ்க்கையும்
No comments:
Post a Comment