மொழி
என் போர்வைக்குள் இருக்கவே விரும்பினாள் அவள்தூக்கம் போனால் ப்ரோபேஷனில் லீவும் இல்லை
முகத்தை மட்டுமே நீட்டினேன்; காதருகில்
உள்ளே வரவா என்று கெஞ்சினாள்
கெஞ்சல்கள் கொஞ்சல்களாய் இனிக்க
கண்ணயர்ந்த நேரத்தில் கன்னத்தைக் கடித்தாள்
இருட்டில் அவளை அணைக்கத் தேடுகையில்
நழுவிச் சென்று கால்களின் இடையே இருத்திக்கொண்டாள்
தூண்டிவிட்டு ஓடுவதிலேயே நீ பெண்ணாகிறாய் பெண்ணே
உன்னிஷ்டம் என்று சொல்லி உறங்கச் செல்கையில்
காதில் வந்து கொஞ்சியே கொல்கிறாள்
என் தூக்கம் கலைக்கும் அந்தக் கொஞ்சல்களுக்கு
அர்த்தம் தேடியே பகலிலும் அலைகிறேன்
கொசுமொழி - தமிழ் - தமிழ் அகராதி கிடைக்குமா?
No comments:
Post a Comment